ஆடையின்றி தெருவில் விட்டுவிடுவேன்... லண்டனில் மனைவியை மிரட்டிய ஆசிய வம்சாவளி கணவன்
லண்டனில் மனைவியை துன்புறுத்தி, நிர்வாணமாக தெருவில் விட்டுவிடுவேன் என மிரட்டிய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
மனைவியை துன்புறுத்தி
வெம்ப்லி, எல்ம் சாலையில் வசித்துவந்த 26 வயது ரவி மகன்பாய் என்பவரே மனைவியை துன்புறுத்தி, மிரட்டிய வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 28ம் திகதி கணவனின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறி, அண்டைவீட்டில் ஒளிந்துகொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த பெண்மணி.
@mylondon
மட்டுமின்றி, சம்பவத்தின் மது போதையில் இருந்துள்ளதாகவும், புதிய கட்டுமான நிறுவனத்தில் வேலைக்காக கடவுச்சீட்டு ஆவணங்கள் தொடர்பில் இருவரும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
வழக்குகள் அனைத்தும்
மட்டுமின்றி, அப்போது வீட்டில் இருந்த ஒரு இளைஞர் முன் அவளை அவமானப்படுத்தி, திட்ட ஆரம்பித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மகன்பாய் அவளை இரண்டு மூன்று முறை அறைந்ததை அடுத்து, அவள் மிகவும் பயந்தாள் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை மகன்பாய் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் அவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் மகன்பாய் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், அந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொலை மிரட்டல்களுக்காக இரண்டு வருடங்களும், கழுத்தை நெரித்ததற்காக 21 மாதங்களும், ஒரு தாக்குதலுக்கு 12 வாரங்களும், மற்றொரு தாக்குதலுக்கு மூன்று வாரங்களும் தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |