லண்டனில் மின்விளக்கு கம்பத்தின் மீது நேராக சென்று மோதிய பேருந்து! புகைப்படங்களுடன் பின்னணி தகவல்
லண்டனில் பேருந்து ஒன்று சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Muswell Hillல் உள்ள ஒரு இடத்தில் தான் இந்த சம்பவம் கடந்த 2ஆம் திகதி மாலை 7.20 மணிக்கு மேல் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதில், பேருந்தின் முன்பகுதி நொறுக்கப்பட்ட நிலையில் இருப்பது தெரிகிறது. மேலும் பேருந்தானது நேராக சென்று மின்விளக்கு கம்பத்தில் மோதியது போல் தெரிகிறது.
இந்த விபத்தில் கார் ஒன்றும் சிக்கியது வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது சம்மந்தமாக யாரும் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Transport for Londonல் பேருந்துகள் வணிக மேம்பாட்டுத் தலைவராக உள்ள டாம் கென்னிங்டன் கூறுகையில், 144 எண் பேருந்தும் காரும் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.