லண்டன் லூசியம் பகுதி பிரபல தமிழ் வர்த்தகர் வீட்டில் நள்ளிரவில் திருட்டு!
சிக்கியது வீடியோ காட்சிகள் லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் நள்ளிரவில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.
குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.
அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை.
அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குறித்த காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது