லண்டனில் துப்பாக்கிச்சூடு: கொலை செய்யப்பட்ட 25 வயது இளைஞர்: 22 வயது இளைஞர் கைது
லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லண்டனில் துப்பாக்கிச் சூடு
திங்கட்கிழமை இரவு தென்மேற்கு லண்டனில் உள்ள மதுபான சாலைக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரவு 10.00 மணிக்கு கிளப்ஹாம் பகுதியில் உள்ள வில்லிங்டன் சாலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கைது நடவடிக்கை
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, 22 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் The Landor மதுபானக் சாலைக்கு எதிரே தடயவியல் துறையினர் கூடாரங்கள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |