லண்டனில் கட்டுமானப் பணியிடத்தில் கோர சம்பவம்: உடல் நசுங்கி பலியான இளைஞர்
கிழக்கு லண்டனில் கட்டுமானப் பணியிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நசுங்கி உயிரிழந்த கட்டிடத் தொழிலாளியின் பெயர் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில்
தொடர்புடைய இளைஞர் டிசம்பர் 12, செவ்வாய்கிழமை Forest Gate மாவட்டத்தில் உள்ள பெவன்சி சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.
Credit: Waltham Forest Trades Council
இந்த நிலையில் மதியத்திற்கு மேல் சுமார் 5 மணியளவில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அந்த இளைஞர் உடல் நசுங்கி மரணமடைந்துள்ளார். முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் இந்திய வம்சாவளி Ekarmanjeet Singh எனவும், 25 வயதேயான அவர் Hughes சாலை அருகே வசித்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
சம்பவயிடத்திலேயே மரணம்
விபத்தை அடுத்து அவசர மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்களே, அந்த இளைஞரை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
Credit: MyLondon
அவசர முதலுதவி அளிக்கப்பட்டும், சம்பவயிடத்திலேயே அந்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் விபத்தில் சிக்கிய இன்னொருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், விபத்து நடந்த குடியிருப்பின் அருகே தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |