அவன் சமூகத்திற்கு ஆபத்தானவன்! லண்டன் ரயிலில் பெண்ணின் கால்களை பிடித்த இளைஞர் சிறையில் அடைப்பு
லண்டன் ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Samuel Creed (21) என்ற இளைஞர் கடந்த 2020ஆம் ஆண்டு ரயிலில் பயணிக்கும் போது பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் இரயில்களில் பயணிக்கவும், பயணிகளிடம் பேசவும் தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையை மீறி கடந்தாண்டு மீண்டும் ரயிலில் பயணித்த Samuel இளம்பெண்ணொருவரை அணுகி அவரின் காலணி குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் அப்பெண் Samuel-ஐ கண்டுகொள்ளாத நிலையில் அவர் கால்களை பிடித்து கொண்ட Samuel, நான் பந்தயம் கட்டுகிறேன், என் போன்ற ஒரு காதலன் உனக்கு வேண்டும் என நீ நினைக்கிறாய் என மோசமாக பேசியிருக்கிறார்.
இது குறித்து அப்பெண் பொலிசில் புகார் அளித்த நிலையில், இரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிசார் Samuel-ஐ கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது, இந்த சூழலில் Samuel-க்கு 26 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி ஹெய்லி வைய்ட் கூறுகையில், தடை உத்தரவை மீறி மீண்டும் ரயிலில் பயணித்துள்ள Samuel செய்துள்ள செயல் அவன் சமூகத்திற்கு ஆபத்தானவன் என்பதை காட்டுகிறது.
பயணத்தின் போது யாரும் பயப்படவோ அல்லது அசௌகரியமாகவோ உணரக்கூடாது, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பே முக்கியம்.
எவ்விதமான பாலியல் தாக்குதல்கள் நடப்பதையும் பொறுத்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.