24 ஆண்டுகள் கழித்து அம்பலமான லண்டன் பள்ளி ஆசிரியரின் கோர முகம்! 14 ஆண்டுகள் சிறையில் அடைப்பு
லண்டனில் 1994ல் இருந்து 1996 வரையிலான காலக்கட்டத்தில் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக ஆசிரியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் Croydon-ஐ சேர்ந்தவர் Alan Kehoe (53). இவருக்கு தான் லண்டனின் கிரவுன் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த 1994ல் 1996 ஆண்டு வரையில் Alan பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிய போது மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்.
கடந்த 2018ல் தான் இது தொடர்பில் ஒருவர் Alan மீது புகார் கொடுத்தார். இதையடுத்து 24 ஆண்டுகள் கழித்து அவர் செய்த குற்றம் வெளியுலகிற்கு தெரியவந்தது.
புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட Alan மீது வழக்கு நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இது தொடர்பில் டிடெக்டிவ் ஸ்மித் கூறுகையில், இந்த வகையான குற்றங்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
Alanஆல் மேலும் யாராவது பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.