லண்டனில் குழந்தை உட்பட மூவருக்கு கத்திக்குத்து: 48 வயது நபர் கைது!

Thiru
in ஐக்கிய இராச்சியம்Report this article
லண்டனில் குழந்தை உட்பட 3 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் கத்திக்குத்து
லண்டனின் கிழக்குப் பகுதியான டேகன்ஹாமில்(Dagenham) கடந்த வெள்ளிக்கிழமை மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர்.
30 வயதுடைய ஒரு பெண் மற்றும் எட்டு வயது சிறுமி, இரண்டு வயது சிறுவன் ஆகியோர் முதல் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமானது அல்ல என்று கூறப்படுகிறது.
45 வயது நபர் கைது
இந்நிலையில் 48 வயதான குல்விந்தர் ராம் என்ற நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குல்விந்தர் ராம் திங்களன்று பார்க்கிங்சைட்(Barkingside) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |