லண்டன் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! மருத்துவமனையில் பல குழந்தைகள்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Dulwich, துர்லோ பார்க் சாலையில் உள்ள Rosemead Preparatory பள்ளியிலே இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவம் குறித்து லண்டன் தீயணைப்பு படை வெளியிட்ட அறிக்கையில், பள்ளியின் இரண்டாவது மாடியில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
இந்த விபத்தில் சிறிய காயமடைந்த பலர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர் மற்றும் பல குழந்தைகள் லண்டன் ஆம்புலன்ஸ் குழுவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Crews have been at the scene of a ceiling collapse at a school in #Dulwich this morning: https://t.co/eznqekOc8m pic.twitter.com/q6jTsDOpjk
— London Fire Brigade (@LondonFire) November 15, 2021
தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் ஒரு முறையான சோதனையை மேற்கொண்டனர் மற்றும் அனைத்து குழந்தைகளும் ஊழியர்களும் சரியாக இருப்பதை பள்ளியுடன் உறுதிப்படுத்தினர்.
நிபுணத்துவம் பெற்ற USAR (நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு) குழு மற்றும் உபகரணங்களும் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்த பயன்படுத்தப்பட்டது என லண்டன் தீயணைப்பு படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.