லண்டனில் பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து பையை திருடிய நபர்! தரையில் பலமாக விழுந்த பரிதாபம்... புகைப்படத்துடன் முழு பின்னணி
லண்டனில் பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்த பையை திருடி கொண்டு ஓடிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் நார்வுட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாலையில் வயதான பெண்ணொருவர் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகில் வந்த மர்ம நபர் பையை இழுத்து கையில் எடுத்து கொண்டு ஓடியிருக்கிறார்.
அந்த சமயத்தில் அப்பெண் தரையில் பலமாக விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பில் நபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பொலிசார் அவரிடம் இது குறித்து பேச வேண்டும் என கூறியுள்ளனர்.
யாருக்கேனும் அவர் குறித்து தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.