பிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் பயங்கர விபத்து: 3 பேர் மரணம்., 12 மணி நேரமாக முடங்கிய போக்குவரத்து
பிரித்தானியாவில் லண்டனைச் சுற்றி உள்ள மிகவும் முக்கியமான M25 சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லண்டன் பெருநகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான, M25 (London Orbital Motorway) சாலையில், திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
Essex-ன் Waltham Abbey டவுன் அருகே நடந்த இந்த விபத்தில், ஒரு லொறி, மினி பேருந்து மற்றும் ஒரு கார் ஒன்றோடு ஒன்று மோதின.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்காவதாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக 9 ஆம்புலன்ஸ்கள், 2 ஏர் அம்புலன்ஸ்கள் மற்றும் பல பொலிஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உதவிக்கு வரவழைக்கப்பட்டன.
இந்த விபத்தின் காரணமாக, சந்திப்பு 27 மற்றும் சந்திப்பு 26-ல் கிட்டத்தட்ட 12 நேரமாக போக்குவரத்து முடங்கியது.
இந்த விபத்துக்கு காரணமாக கருதப்படும் 2 வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக Essex பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,, இந்த விபத்து ஏதேனும் டேஷ் கமெராவில் பதிவாகியிருந்தாலோ, விபத்து குறித்த தகவல் அறிந்திருந்தாலோ உடனடியாக தங்களை அணுகுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

