இவரை அடையாளம் தெரிந்தால் உதவுங்கள்... புகைப்படம் வெளியிட்டு லண்டன் பொலிசார் கோரிக்கை
லண்டனில் கார் விபத்தில் சிக்கி 50 வயது கடந்த நபர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த விவகாரம் தொடர்பில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி குறித்த சாலை விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தினை நேரில் பார்த்தவர் குறித்த தகவலை திரட்டவே பொலிசார் தற்போது முயன்று வருகின்றனர்.
Image: Metropolitan Police
விடிகாலை நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தை பெண் ஒருவர் நேரில் பார்த்துள்ளார் என அதிகாரிகள் தரப்பு நம்புகிறது. பார்க் ராயல், பாரெட்ஸ் கிரீன் ரோடு பகுதியில் அதிகாலை 3.24 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
பார்க் ராயல் பகுதியை சேர்ந்த 53 வயது நபரே விபத்தில் சிக்கியுள்ளார். மட்டுமின்றி சம்பவயிடத்திலேயே அந்த நபர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கருப்பு நிற BMW இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது. மட்டுமின்றி, சம்பவயிடத்தில் இருந்து அந்த கார் உடனடியாக வெளியேறியுள்ளது. ஆனால் இதுவரை அந்த சாரதியை மாநகர பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
விசாரிக்க வேண்டும்
இந்த நிலையிலேயே அந்த விபத்தை நேரில் பார்த்ததாக பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவர் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரல்ல என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவரிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்றே தெரிவித்துள்ளனர்.
Image: Metropolitan Police
விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில், ஒருவர் சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளார், அந்த விபத்தை ஏற்படுத்திய சாரதியை இன்னமும் அடையாளம் காண முடியாமல் உள்ளது எனவும் பொதுமக்கள் கண்டிப்பாக இந்த விவகாரத்தில் உதவ முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |