லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் பற்றி அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல்

Srilanka London UnitedKingdom FireAccident
By Kaviarasan Nov 19, 2021 11:42 PM GMT
Report

லண்டனில் குடியிருப்பு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் அருகில் வசிப்பவர்கள் சில தகவல்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bexleyheath-ல் உள்ள குடியிருப்பு ஒன்றில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் பற்றி அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல் | London Fire Accident Srilanka Family Members Died

இதில் உயிரிழந்த பெண், தீ விபத்து ஏற்பட்டவுடனே தன்னுடைய கணவருக்கு போன் செய்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்வதற்குள், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பது மற்றும் தீயில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற போராடினர்.

இதில், அந்த பெண்ணின் மைத்துனர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டும் அந்த தீ விபத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அருகில் வசிக்கும் Scott James(44) என்பவர் கூறுகையில், சம்பவம் தினமான வியாழக்கிழமை மாலை தெருவில் புகை சூழ்ந்ததால், உடனடியாக வெளியே வந்து பார்த்த போது, குறித்த வீடு தீயில் கருகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் பற்றி அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல் | London Fire Accident Srilanka Family Members Died

தீ கொஞ்சம், கொஞ்சமாக வீடு முழுவதும் மேலே சென்றது. ஆனால் வீட்டில் எந்த ஒரு வெடிப்பும் ஏற்படவில்லை, அதன் பின் தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டதாக கூறினார்.

அங்கு வசிக்கும் James என்பவர் கூறுகையில், நேற்று கூட அவர்களைப் பார்த்தேன். அவர்களை நோக்கி கை அசைத்தேன். ஹலோ சொல்லி அவர்களிடம் பேசினேன். அது ஒரு அழகான குடும்பம்.

ஆனால், இன்று காலை எழுந்தவுடன் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை கேட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

விபத்து நடந்த வீட்டில் இருந்து சுமார் 10 மீற்றர் தொலைவில் வசிக்கும் 36 வயது மதிக்கத்தக்க Ling Han கூறுகையில், ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அதன் பின் வெளியே வந்து பார்த்த போது, தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழந்தைகளை வெளியில் தூக்கி வந்து, அவர்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

அவர்கள் CPR செய்து குழந்தைகளை காப்பாற்ற போராடினர். அந்த நேரத்தில் எப்படி நான் உதவுவது என்பதே எனக்கு தெரியவில்லை. கடும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் பற்றி அருகில் வசிப்பவர்கள் சொன்ன தகவல் | London Fire Accident Srilanka Family Members Died

வீட்டின் முதல் தளத்தில் ஒரு பெரிய தீப்பிழப்பு கொளுந்து விட்டு எரிவதை பார்த்தேன். உயிருக்கு ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று நினைத்து வேதனையடைந்தேன் என்று கூறியுள்ளார்.

இது ஒரு விபத்து போன்று தான் தெரிவதாகவும், இதில் எந்த ஒரு சந்தேகமும் தற்போதைக்கு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதாகவும், இந்த பயங்கரமான சம்பவத்தின் முழு காரணத்தை தெரிந்து கொள்ள, தீயணைப்பு படையில் உள்ள சக ஊழியர்கள் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US