காலி செய்யப்பட்ட லண்டன் விமான நிலையம்! மர்ம பொருள் அடங்கிய பொதி கண்டுபிடிப்பு
மர்மமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையம் தற்காலிகமாக காலி செய்யப்பட்டது.
காலி செய்யப்பட்ட விமான நிலைய முனையம்
வெள்ளிக்கிழமை லண்டனின் கேட்விக் விமான நிலைய அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை தெற்கு முனையத்துக்கு அனுப்பி வைத்ததை அடுத்து அப்பகுதி தற்காலிகமாக காலி செய்யப்பட்டது.
பொலிஸார் வழங்கிய தகவல் படி, தடை செய்யப்பட்ட பொருள் கொண்ட பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தெற்கு முனையம் முற்றிலுமாக காலி செய்யப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Gatwick airport evacuation #London pic.twitter.com/om3BIbROk0
— Marco Pajo (@ISawMarcoPolo) November 22, 2024
அக்கறையை அதிகரித்துள்ள இந்த சம்பவத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்ப கடினமாக செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் முன் பதற்றம்
இந்த சம்பவமானது சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு கண்டெடுக்கப்பட்ட ஒரு சில நேரங்களில் நடந்துள்ளது.
தெற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகில் மர்மமான பை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சட்ட அமலாக்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |