பிரித்தானியர்கள் பலர் லேபர் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ள நிலையில் ஒரு தொகுதி மட்டும் எதிர்ப்பு
பிரித்தானியாவில் 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆட்சியிலிருந்தும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
ஆகவே, எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என லேபர் கட்சி பக்கம் பலரும் திரும்பிக் கொண்டிருக்க, எங்கள் வாக்கு லேபர் கட்சிக்கு கிடையாது என வெளிப்படையாகவே கூறிவிட்டனர் ஒரு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள்.
Image: Adam Toms/MyLondon
என்ன காரணம்?
லண்டனிலுள்ள Bethnal Green மற்றும் Stepney தொகுதி மக்கள், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், 73 சதவிகித வாக்குகள் பெரும்பான்மையுடன் லேபர் கட்சியை வெற்றிபெறச் செய்தார்கள்.
Image: Adam Toms/MyLondon
ஆனால், இம்முறை அக்கட்சிக்கு தாங்கள் வாக்களிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக அந்த தொகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
Bethnal Green மற்றும் Stepney தொகுதி, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும்.
Image: Adam Toms/MyLondon
ஆகவே, காசா தொடர்பில் லேபர் கட்சியின் நிலைப்பாடு காரணமாக, குறிப்பாக, லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் காசாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காததால் அவரை புறக்கணிக்கப்போவதாக அந்த தொகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
Image: Adam Toms/MyLondon
மேலும், இஸ்லாமியரல்லாதவர்கள், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விதிக்கவிருக்கும் வரிகள் தொடர்பான கவலை காரணமாக அக்கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள்.
Image: Geoff Caddick/Getty Images
சரி, அவர்கள் லேபர் கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை, கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் வாக்களிக்கப்போவதில்லை. அப்படியானால், யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள்? பெரும்பாலானோர், சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்போகிறார்களாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |