94 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! 20 வயது பிரித்தானிய பெண் படைத்த சாதனை
2019ஆம் ஆண்டு அழகுப் போட்டியில் Bare Face சுற்றில் மெலிசா வெற்றி பெற்றவர் ஆவார்
அக்டோபர் 17ஆம் திகதி நடக்கும் இறுதிச் சுற்றில் 40 போட்டியாளர்களுடன் மெலிசா போட்டியிட உள்ளார்
லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒப்பனை செய்து கொள்ளாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.
பிரித்தானியாவில் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில், லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூப்(20) என்ற பெண் கலந்துகொண்டார். அவர் ஒப்பனை ஏதும் செய்யாமல் போட்டியில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்ததன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.
SWNS
94 ஆண்டுகால அழகிப் போட்டி வரலாற்றில் ஒப்பனை இல்லாமல் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் மெலிசா தான். மெலிசா ரவூப் கூறும்போது, 'அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வயதுடைய பல பெண்கள் ஒப்பனை செய்துகொள்வதாக நான் உணர்கிறேன். இது எனக்கு நிறைய அர்த்தத்தை கொடுத்துள்ளது.
மற்ற பெண்களும், இளம்பெண்களும் தங்கள் இயற்கை அழகைக் காட்ட ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒருவர் தங்கள் சொந்த தோலில் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முகத்தை ஒப்பனையால் மறைக்கக் கூடாது. நமது குறைபாடுகள் நம்மை யார் என்று காட்டும், மேலும் அது நம் ஒவ்வொருவரையும் தனித்துவமாக்கும்' என தெரிவித்துள்ளார்.
SWNS
இதுகுறித்து போட்டி அமைப்பாளர் ஆங்கி பீஸ்லே கூறுகையில், 'மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்துகொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் ஒப்பனை செய்திருக்கும்போது, இது மிகவும் துணிச்சலான விடயம். ஆனால் அவர் இளம் பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை கூறியிருக்கிறார்.
ஒரு போட்டியாளர் முற்றிலும் ஒப்பனை இல்லாமல் அரையிறுதியில் போட்டியிடுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக தான் அதிகாரம் பெற்றதாக உணர்ந்ததாக அவர் கூறினார்' என தெரிவித்துள்ளார்.
Kam Murali