லண்டனில் உயிரிழந்த 22 வயது இளம்பெண்ணின் முதல் புகைப்படம் வெளியீடு! 3 ஆண்கள் கைது
லண்டனில் கிறிஸ்துமஸ் தினத்தன்று உயிரிழந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
இளம்பெண் பலி
வடமேற்கு லண்டனில் உள்ள பிரண்ட் கிராஸ் மேம்பாலத்தில் கடந்த ஞாயிறு அன்று Maria Carolina Do Nascimento Migel (22) என்பவரின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 21,29,32 வயதுகளில் உள்ள மூன்று ஆண்களை பொலிசார் கைது பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டனர்.
Met Police
பொலிசார் கோரிக்கை
இரண்டாவது காரின் ஆண் ஓட்டுநருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக தகவல் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.