லண்டன் குடியிருப்பில் பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமி... கொலை வழக்கில் சிக்கிய பெண்
லண்டனில் 11 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்மணி மீது கொலை வழக்கு
கிழக்கு லண்டனில் கடந்த 2021ல் நடந்த இச்சம்பவத்தில் தற்போது 33 வயதான ஜெஸ்மின் அக்தர் என்ற பெண்மணி மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
@mylondon
அத்துடன் தடை செய்யப்பட்ட பொருளை இணையமூடாக வாங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2021ல் 11 வயதேயான பாத்திஹா சப்ரின் என்ற சிறுமி தங்களது குடியிருப்பில் பேச்சு மூச்சின்றி காணப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் அதே நாளில் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால், பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டு சிறுமி இறந்ததாக பரிசோதனையில் தெரியவர, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போனது.
மருத்துவராக வேண்டும் என்ற கனவு
உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், சிறுமி ஃபாத்திஹா தனது 11 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் ஃபாத்திஹா என குறிப்பிட்டுள்ள அந்த உறவினர், மிகுந்த திறமைசாலி எனவும் தெரிவித்துள்ளார்.
Image: Nishat Tasnim Disha
தற்போது ஜெஸ்மின் அக்தர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது தொடர்பில் ஃபாத்திஹா குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரணையில், உண்மை வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |