லண்டனில் நாட்கணக்கில் காணாமல் போன 26 வயது இளம்பெண்ணின் நிலை குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக காணாமல் போன இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் டவர் ஹாம்லெட்ஸை சேர்ந்தவர் பென்கா பெட்கோவா (26). இவர் இசைபள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி தனது அடுக்குமாடி வீட்டில் கடைசியாக காணப்பட்ட பென்கா பின்னர் காணாமல் போனார். இதன் பிறகு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பென்கா தொடர்பு கொள்ளவில்லை.
அவர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் பென்கா பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டார், இது குறித்து பொலிசாரின் அறிக்கையில், காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பென்கா குறித்த தகவலை பகிர்ந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
அவள் பாதுகாப்பாகவும் நலமாகவும் தற்போது இருக்கிறாள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.