பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளாக வாழ்கிறார்! லண்டனை சேர்ந்த 20 வயது இளம்பெண் தொடர்பில் பொலிஸார் வைத்த கோரிக்கை
லண்டனில் இளம்பெண்ணொருவர் காணாமல் போன நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
வடமேற்கு லண்டனை சேர்ந்தவர் அக்னீஸ் அகோம் (20). இவர் கடந்த 9ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியில் கிளம்பி சென்ற பின்னர் காணாமல் போயிருக்கிறார்.
அக்னீஸ் காணாமல் போனதாக கடந்த 11ஆம் திகதி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த அக்னீஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்.
அக்னீஸ் உயரம் மற்றும் அவர் காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்த விபரத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து டிடெக்டிவ் அதிகாரி நீல் ஜான் கூறுகையில், கடந்த 9 நாட்களுக்கு மேலாக அக்னீஸ் காணாமல் போயுள்ளார்.
அவரின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளோம். காணாமல் போனதில் இருந்து அக்னீஸ் அவர் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை.
எங்கள் அதிகாரிகள் தொடர்ந்து அக்னீஸை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.