லண்டனில் மாயமான 12 வயது சிறுமி! யார் அவர்? பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்கள்
லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக பொலிசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் Sloughல் இருந்து லிலனா ஹென்றி (12) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை மாயமானார்.
தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பில் பொலிசார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில் லிலனாவின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் லலினா ஹென்றியை பார்த்துள்ளீர்களா? அவர் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் Sloughல் இருந்து காணாமல் போயுள்ளார்.
லலினா லண்டனின் சுட்டனில் அடிக்கடி முன்னர் காணப்பட்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.