லண்டனில் 19 நாட்களாக காணாமல் போன 16 வயது டீன் ஏஜ் சிறுமி! புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்
லண்டனில் 19 நாட்களாக காணாமல் போன 16 வயது டீன் ஏஜ் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனை சேர்ந்தவர் Nahid Stitou (16). இவர் கடந்த மாதம் 27ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனார். அன்றிலிருந்து Nahid குறித்து எந்தவொரு தகவலும் தெரியாமல் குடும்பத்தார் தவித்து வருகின்றனர்.
சிறுமியின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் அவளுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 19 நாட்களாக காணாமல் போன சிறுமி Nahid ன் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அந்த சமூகவலைதள பதிவில் தயவு செய்து Nahid-ஐ கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள் என பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுமி Nahid பார்ப்பதற்கு எப்படி இருப்பாள் என பொதுமக்கள் அறிந்து கொள்ளவே அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.