லண்டன் பகுதியில் நள்ளிரவில் கேட்ட கூச்சல் சத்தம்! குத்தி கொல்லப்பட்ட 21 வயது இளம்பெண்
லண்டனில் 21 வயது இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனின் South Ealingல் தான் திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 20 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து தங்களுக்கு தெரியும் எனவும், அவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லும் பணி நடந்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி சீன் வில்சன் கூறுகையில், இது உண்மையிலேயே ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்.
குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் சமூகங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காவல்துறை புலனாய்வு குழுவினர் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வீட்டில் வசிக்கும் பெண் கூறுகையில், குற்றம் நடைபெற்ற இடத்தில் அதிக மக்கள் கூச்சலிடும் சத்தம் நள்ளிரவில் கேட்டது. இது ஒரு கொடுமையான சம்பவம் என கூறியுள்ளார்.