இருளில் மொத்தமாக மூழ்கிய லண்டன் நகரம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
பிரித்தானியாவில் லண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் பெரும் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மின்வெட்டு இரவு முழுவதும் நீடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில், மின்சாரம் மீண்டும் திரும்பியதாக தெரிய வந்துள்ளது.
நிலத்தடி மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மின்வெட்டு காரணமாக வடமேற்கு லண்டனில் உள்ள நுகர்வோருக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளின் மின்சாரம் திரும்பியிருந்தாலும், அதிகாரிகள் பணியாற்றிவருவதாகவும், மின்வெட்டு ஏற்பட்டுள்ள எஞ்சிய பகுதியிலும் உடனடியாக மின்சாரம் திரும்பும் என தெரிவித்துள்ளனர்.