லண்டனில் இந்திய மக்கள் போராட்டம்! வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்: வைரலாகும் வீடியோ
சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் வாழும் இந்திய மக்கள் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்று இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் முக்கிய தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கோடி ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றினார்.
1/ As dawn broke in London today, members of the diaspora and friends of India in the UK dropped a huge banner reading #ResignModi from Westminster Bridge. #indiaIndependenceday #IndependenceDayIndia #IndependenceDay2021 pic.twitter.com/sNfCs3OHRX
— SouthAsia Solidarity (@SAsiaSolidarity) August 15, 2021
இந்நிலையில் லண்டன் வாழ் மக்கள் நரேந்திர மோடியை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் இருந்து நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு 'Resign Modi' என்ற பெரிய பேனரை பிடித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.