லண்டனில் கென்சிங்டன் அரண்மனை அருகே சற்று முன் நடந்த சம்பவம்! மர்ம நபரை சுட்டுக் கொன்ற பொலிஸ்
லண்டனில் கென்சிங்டன் அரண்மனை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kensington-ல் Marloes சாலையில் உள்ள வங்கி மற்றும் புத்தக தயாரிப்பு பகுதியில், மர்ம நபர் துப்பாக்கியுடன் பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு மேல் நுழைந்துள்ளார்.
அதன் பின் அங்கிருந்து வெளியேறிய நபர், காரில் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அதன் பின் ஆயுதமேந்திய பொலிசார் நடத்திய தீவிர சோதனையில், அடுத்த 15 நிமிடங்களுக்குள் குறித்த நபரின் வாகனம் Kensington சாலை மற்றும் அரண்மனை கேட் சந்திப்பில் இருப்பதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார் என்பதை அறிவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அவருடைய உறவினர்களின் விவரங்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் கூறினர்.
மேலும், இந்த சம்பவத்தால், பொது மக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அதே சமயம் இப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும், சில மணி இது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் ஏன் அவரை சுட்டுக் கொன்றனர்? இடையில் நடந்தது என்ன என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை.