லண்டனில் கேரள சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் புகைப்படம் வெளியானது
லண்டனில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 வயது கேரளச் சிறுமி குற்றுயிராக மீட்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் வெளிநாட்டில் கைதான நிலையில், அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான
லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட, அதே சம்பவத்தில் 9 வயது கேரள சிறுமியும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை பொலிசார் துருக்கியில் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம், ஹாக்னியில் உள்ள கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட்டில் தனது குடும்பத்தினருடன் அந்த 9 வயது சிறுமி உணவருந்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த துப்பாக்கிதாரி ஒருவர், அவர்கள் இருந்த உணவகத்தை நோக்கி ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரண்டு துருக்கிய குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், குறித்த சிறுமி சிக்கிக் கொண்டார் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், Tottenham Turks என்ற குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
துருக்கியில் மறைவாக
இந்த வழக்கில் Hackney Bombers என்ற குழுவின் Kemal Armagan என்பவர் தேடப்பட்டு வந்துள்ளார். ஏற்கனவே இவர் இரண்டு கொலைகள் தொடர்பில் தேடப்படுபவர். இந்த நிலையில், வார தொடக்கத்தில் பொலிசாரால் Kemal Armagan கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் இவர் பிரித்தானியா மற்றும் மால்டோவா ஆகிய இரண்டு நாடுகளிலும் தேடப்பட்டு வருபவர். போலியான பெயர் மற்றும் முகவரியுடன் துருக்கியில் மறைவாக வாழ்ந்து வந்துள்ளார் என்றே துருக்கி பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |