லண்டனில் பரபரப்பு! நூற்றுக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்..!
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் அலுவலக கட்டிடங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மத்திய லண்டனில் பரபரப்பான பகுதியான லீசெஸ்டர் சதுக்கத்தில் (Leicester Square) எரிவாயு கசிவு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளில் உள்ள ஹோட்டல் விருந்தினர்கள், கடைக்காரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை காலி செய்யுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டனர். மேலும், 200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவசர சேவைகள் தற்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ளன, மேலும் மக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Credit: Alamy
எரிவாயு பொறியாளர்கள் இப்போது சதுக்கத்தில் கசிவை சரிசெய்ய முயற்சிப்பதாக லண்டன் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தியது.
மெட் பொலிஸின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “எரிவாயு கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், லெய்செஸ்டர் சதுக்கத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் கலந்துகொண்டு சம்பவத்தை நிர்வகித்து வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டுள்ளன, மேலும் சதுக்கம் தற்போது பாதசாரிகளுக்கு மூடப்பட்டுள்ளது. தயவுசெய்து அந்தப் பகுதியைத் தவிர்க்கவும்."