லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் வாழைப்பழங்களை வாங்கிய நபர்! வீட்டில் அதை சாப்பிட முயன்ற போது காத்திருந்த அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டில் வாழைப்பழம் வாங்கிய டாக்ஸி ஓட்டுனர் அது வைக்கப்பட்டிருந்த கவரில் உலகின் கொடிய விஷம் கொண்ட சிலந்தி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
லண்டனின் West Wickhamல் உள்ள சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில் வாழைப்பழங்களை சமீபத்தில் வாங்கினார் ஜோ ஸ்டெயின் (37). ஒரு பையில் போட்டு வாழைப்பழங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது.
பின்னர் வீட்டுக்கு வந்த ஜோ, அடுத்தநாள் காலையில் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என நினைத்து அந்த பையை திறந்தார். அப்போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அதன்படி உலகிலேயே கொடிய விஷம் கொண்ட சிலந்தி ஒன்று அந்த பைக்கும், வாழைப்பழத்துக்கும் நடுவில் இருப்பதை அவர் கண்டார்.
இதன் பின்னர் நடந்ததை அதிர்ச்சி விலகாமல் அவரே கூறுகிறார். பையை திறக்கும் போது சிலந்தி இருப்பதை கண்டேன், அது முதலில் நகர்ந்து செல்ல தொடங்கியது. அது குறித்து கூகுள் செய்த போது அது உலகிலேயே அதிக விஷம் கொண்ட பிரேசில் வகை ’வாண்டரிங் சிலந்தி’ என தெரிந்தது.
அதற்கு கிரேக்க மொழியில் கொலையாளி என பெயராகும். அவற்றின் கடி மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதை பார்த்த உடனேயே நானும், என் மனைவியும் அதிர்ச்சியடைந்தோம்.
நல்லவேளையாக அது சிறிது நேரத்தில் இறந்தது. அந்த பையை அப்படியே எடுத்து சென்று சமையலறையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டேன். இருந்த போதிலும் சமையலறைக்கு செல்ல வேண்டாம் என என் மனைவியை எச்சரித்தேன்.
இந்த சிலந்தி பொதுவாக தென் அமெரிக்காவில் காணப்படுகிறது மற்றும் பெரும்பாலும் வாழை இலைகள் அல்லது கொத்துக்களில் காணப்படுகிறது. அதனால் இதற்கு வாழைப்பழ சிலந்தி என்ற பெயரும் உண்டு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
அவற்றின் விஷம் நரம்பு மண்டலத்திற்கு நச்சுத்தன்மையுடையது என தெரியவந்துள்ளது. இதனிடையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அந்த சிலந்தியை தங்களிடம் கொடுக்குமாறு சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் ஜோவிடம் தெரிவித்துள்ளது.
அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளரின் இந்த அனுபவத்திற்காக அவரிடம் மன்னிப்பு கோர அவரிடம் தொடர்பில் உள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை, அவற்றைத் தடுப்பதற்கான செயல்முறைகள் எங்களிடம் உள்ளன என கூறியுள்ளார்.