லண்டனில் கத்தார் கோடீஸ்வரரால் பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்: குடும்பத்தினர் எடுத்த முடிவு
லண்டனில் கத்தார் கோடீஸ்வரர் ஒருவரது வாகனம் மோதி பலியான பிரித்தானியரின் குடும்பம் தற்போது இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
கத்தார் கோடீஸ்வரரின் வாகனத்தில் சிக்கி
மத்திய லண்டனில் 66 வயதான சார்லஸ் ராபர்ட்ஸ் என்பவரே கத்தார் கோடீஸ்வரரின் மின்னல் வேக வாகனத்தில் சிக்கி பரிதாபமாக பலியானவர். 2019 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த சம்பவத்தில் கத்தார் கோடீஸ்வரரான ஹசன் நசர் அல் தானி என்பவர் தமது ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார்.
Image: SWNS
மணிக்கு 30 மைல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் அல் தானி, சம்பவத்தின் போது மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் Hyde Park அருகாமையில் வெலிங்டன் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சார்லஸ் ராபர்ட்ஸ் மீது அல் தானியின் ரோல்ஸ் ராய்ஸ் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த வழக்கில் அல் தானிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மட்டுமின்றி 3 ஆண்டுகள் வாகனம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், 25,000 பவுண்டுகள் அபராதமும் விதித்தது.
200,000 பவுண்டுகள் இழப்பீடு
இந்த விவகாரத்தில் தற்போது சார்லஸ் குடும்பம் 200,000 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. சார்லஸ் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள தங்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆனது என கூறும் அந்த குடும்பம், வாகன சாரதிகளின் கவனக்குறைவால் குடும்பங்கள் பல பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது.
@PA
விபத்து நடந்த போது 68 வயதான ஊனமுற்ற தமது சகோதரர் பீற்றருடன் வாழ்ந்து வந்துள்ளார் சார்லஸ். சார்லஸ் மரணமடைந்த பின்னர் பீற்றரும் கவனிக்க ஆள் இன்றி தவித்துப்போயுள்ளார்.
கத்தாரை சேர்ந்த அல் தானி குடும்பமானது லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், Shard, Harrods மற்றும் PSG கால்பந்து அணியிலும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.