13 வயது சிறுமியை சந்திக்க அயர்லாந்துக்கு புறப்பட்ட இந்திய வம்சாவளி லண்டன் நபர்... காத்திருந்த அதிர்ச்சி
லண்டனில் குடியிருக்கும் இந்திய வம்சாவளி நபர் 13 வயது சிறுமியை சந்திக்கும் பொருட்டு வடக்கு அயர்லாந்துக்கு பயணப்பட்ட நிலையில், காத்திருந்த பொலிசார் கைது செய்துள்ளனர்.
அயர்லாந்து பொலிசாரால் கைது
லண்டனில் Hammersmith பகுதியை சேர்ந்தவர் 31 வயதான அனில் பட்டேல். இவரே வடக்கு பெல்ஃபாஸ்ட் பகுதியில் வைத்து அயர்லாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்.
@getty
கடந்த 2023 ஜூலை 13 ம் திகதி அனில் பட்டேல் கைதாகியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் என தெரியாமல் இணையமூடாக 13 வயது சிறுமியுடன் ஜூன் 27 மற்றும் ஜூலை 14 ஆகிய திகதிகளில் இவர் தொடர்பு கொண்டுள்ளார்.
சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு தூண்டும் வகையில் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும், சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறி அனில் பட்டேல் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொலிஸ் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்துள்ள அனில் பட்டேல், 13 வயது சிறுமி என கருதி பொலிஸ் தரப்பிடம் சேட் செய்து வந்துள்ளார்.
பொலிஸ் தரப்பில் எச்சரிக்கை
மட்டுமின்றி, முகம் சுளிக்கும் குறுந்தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அத்துடன், நேரில் சந்தித்துக்கொள்ள விருப்பம் இருப்பதாக கூறிய நிலையில், வடக்கு பெல்ஃபாஸ்ட் பகுதியில் சந்திக்கவும் முடிவாகியுள்ளது.
Image: Google
இந்த நிலையிலேயே லண்டனில் இருந்து வடக்கு பெல்ஃபாஸ்ட் பயணப்பட்ட அனில் பட்டேல், காத்திருந்த பொலிசாரால் கைதானார். போலியான அடையாளத்துடன் இணையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தப்பலாம் என சமூக விரோதிகள் எவரும் கருத வேண்டாம் என்றும் பொலிஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அனில் பட்டேல் குறித்த புகைப்படம் மற்றும் மேலதிக தகவல் எதுவும் பொலிஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |