லண்டனில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்! சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்
லண்டனில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடந்த கொலைகள் தொடர்பாக சந்தேக நபரின் புகைப்படத்தை மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில், ஆஷ்பிரிட்ஜ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில், 45 வயது மிக்க ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட நேரத்தில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் பொலிஸாருக்கு மற்றோரு அழைப்பு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே பகுதியில், அரை மைல் தொலைவில் இருக்கும் Jerome Crescent எனும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 59 வயதுடைய ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த இரண்டு கொலைகளையும் ஒரே நபர் தான் செய்துள்ளார் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்கு பிறகு இரண்டு கொலைகளுக்கும் தொடர்புடைய நபராக Lee Peacock எனும் 49 வயதுடைய நபரை சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், லீ பீகாக்கின் புகைப்படத்தையும் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள், அல்லது இந்த கொலைகள் சம்பந்தமாக மிகச் சிறிய, பயனற்ற தகவல் என நீங்கள் நினைக்கும் ஒரு தகவலாக இருந்தாலும் கூட உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

