லண்டன் மேயர் தேர்தல்: 3 வது முறையாக சாதிக் கான் வெற்றி!
லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் தேர்தல்
பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்களை விட தொழிற்கட்சி வேட்பாளர்கள் பலத்த ஆளுமைகளை காட்டி வருகின்றனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில் டஜன் கணக்கான ஆங்கில கவுன்சில்கள் மற்றும் மேயர் இடங்களை லேபர் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெரும் என கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக வெற்றி
இந்நிலையில் தொடர்ந்து 3 வது முறையாக தொழிற் கட்சி வேட்பாளர் சாதிக் கான் லண்டன் மேயர் பொறுப்பிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் மற்றும் அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) ஆகியவை தொடர்பான பிரச்சனைகள் பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டாலும் சாதிக் கான் தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
லண்டன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 53 வயதான சாதிக் கான் பிரித்தானிய தலைநகரின் முதல் முஸ்லிம் மேயராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |