தன்னுடைய சொந்த சிறுநீரை குடிக்கும் லண்டன் மேயருக்கான வேட்பாளர்! வைரலாகும் வீடியோ
லண்டன் மேயர் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய சொந்த சிறுநீரை குடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வரும் 6-ஆம் திகதி மேயருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிடும், முன்னாள் வங்கி ஊழியரான Brian Rose வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை அவர் 2018-ஆம் ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததாகவும், அதன் பின் அதை நீக்கிவிட்டதாகவும், இப்போது தேர்தல் நேரத்தில் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதில், Brian Rose தன்னுடைய சொந்த சிறுநீரை இரண்டு முறை குடிக்கிறார். அவருடன் ஓட்டப்பந்தய வீரர் Timothy Shieff இருப்பதாக கூறப்படுகிறது. இதை குடித்த பின் Brian Rose, உண்மையில் இது மோசமாக இல்லை, கொஞ்சம் உப்பாக இருக்கிறது என்பது போல் கூறுகிறார்.
ஆனால் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. இந்த தேர்தலில், வெளியான கருத்துக் கணிப்பின் படி, இப்போது மேயராக இருக்கும் சாதிக்கானே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.