ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 13... ஒரே ஆண்டில் 116,000: திகிலடைய வைக்கும் லண்டன்
லண்டனில் 2024ல் மொத்தமாக 116,000 மொபைல் போன்கள் திருடு போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மணிக்கு 13 போன்கள்
2024 ல் 116,656 மொபைல் போன் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை என்பது இதுவரை பதிவாகியுள்ளதில் சாதனை எண்ணிக்கை என்றே கூறப்படுகிறது.
கடந்த 2017ல் மொத்தம் 77,000 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 50 சதவீதத்திற்கும் அதிக எண்ணிக்கையில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவான சம்பவங்கள் என்பது மணிக்கு 13 போன்கள் என பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 1,300 சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது.
116,656 போன்கள் திருடப்பட்டிருந்தாலும், வெறும்169 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 8,588 மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளது.
பொலிஸ் தரவுகளில் பாதிக்கப்பட்டவர்களில் 61,000 பேர்கள் பெண்கள் என்றும் 48,000 பேர்கள் ஆண்கள் என்றும் எஞ்சியர்வகள் நிலை பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தலைநகரிலேயே திருட்டு சம்பவங்கள் சாதனை எண்ணிக்கையில் பதிவாகியிருந்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நமது அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், சட்டத்தால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிகக் குறைந்த எண்ணிக்கை
மேலும், வெளியான தரவுகளின் அடிப்படையில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொழில்முறை குற்றவாளிகளே பெரும்பாலான மொபைல் திருட்டுகளைச் செய்கிறார்கள். 2017 முதல் 2024 வரை திருடப்பட்ட மொத்த மொபைல் போன்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 684,000 என்றே தெரிய வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட மொபைல் போன்களின் மொத்த மதிப்பு தோராயமாக 365 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு திருடப்பட்ட கைபேசி வகைகளில் ஆப்பிள் ஐபோன்கள் 71,000க்கும் சற்று குறைவாகவும், அதைத் தொடர்ந்து சாம்சங் போன்கள் 14,000 எனவும் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான கைபேசி திருட்டுகள் மதியத்திற்கு மேல் மற்றும் மாலை நேரமே நடந்துள்ளது. கடந்த ஆண்டு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை 8,231 போன்கள் திருடப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 8,806; மற்றும் மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை 8,975 மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளது.
ஆனால், காலை 6 மணி முதல் 7 மணி வரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திருட்டுகள் நடந்துள்ளன, 1,036 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு அதிக தொலைபேசிகள் திருடப்பட்ட இடம் வெஸ்ட்மின்ஸ்டர் என்றும், இங்கே 34,039 அலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |