துருக்கி நிலநடுக்கத்தில் அந்த மக்கள் அதிகம் சாகவில்லையே... பிரித்தானியாவில் கொந்தளிக்க வைத்த கடிதம்

London Turkey Earthquake Death
By Arbin Feb 16, 2023 01:48 AM GMT
Report

பிரித்தானியாவில் Hackney பகுதியில் அமைந்துள்ள துருக்கி சமூக மக்களின் மசூதி ஒன்றில் கிடைக்கப்பெற்ற கடிதம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக இஸ்லாமியர்கள் இறக்கவில்லை

சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த அந்த கடிதம், அதிக இஸ்லாமியர்கள் இறக்கவில்லை என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கி நிலநடுக்கத்தில் அந்த மக்கள் அதிகம் சாகவில்லையே... பிரித்தானியாவில் கொந்தளிக்க வைத்த கடிதம் | London Mosque Sent Vile Letter

Image: Erkin Guney

லண்டனில் வசிக்கும் பெரும்பாலான துருக்கி மற்றும் சிரியா மக்கள் பிப்ரவரி 6ம் திகதி ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நண்பர்களையும் உறவினர்களையும் இழந்துள்ளனர்.

இதுவரை 41,000 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும், சம்பவம் நடந்து 9 நாட்கள் கடந்தும் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, லண்டனில் உள்ள துருக்கி சமூக மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்று தொடர்பில் முக்கிய தலைவர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படியான ஒரு கடிதம் எழுதியவருக்காக, இந்த இக்கட்டான சூழலிலும் கடவுளிடம் மன்றாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை, காரணம் அவர் உதவி தேவைப்படும் மன நிலையில் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

2 மில்லியன் இஸ்லாமியர்கள்

முதலில் அந்த கடிதம் ஒரு இரங்கல் செய்தியாக இருக்கும் என்றே நம்பியதாக கூறும் அவர், ஆனால் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் தம்மை வருத்தமடைய செய்துள்ளதாகவும், அதிக இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தில் இறக்காமல் போன வருத்தத்தில் இந்த கடிதம் எழுதுவதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கத்தில் அந்த மக்கள் அதிகம் சாகவில்லையே... பிரித்தானியாவில் கொந்தளிக்க வைத்த கடிதம் | London Mosque Sent Vile Letter

@AFP

2 மில்லியன் இஸ்லாமியர்கள் வரையில் இறக்க கூடும் என கருதியதாகவும், ஆனால் தற்போதைய எண்ணிக்கை வருத்தமளிப்பதாகவும் அந்த நபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான ஒரு கடிதம் எழுத முடிவு செய்தவர் உண்மையில் உளவியல் பாதிப்பு கொண்டவராக இருக்கலாம் எனவும், ஒரு சமூக மக்கள் அதிகமானோர் இறக்கவில்லை என வருந்துவது குற்றச்செயல் எனவும், இந்த கடிதத்தை பொலிசருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US