லண்டனில் இளம் தாயார் மற்றும் 2 குழந்தைகளின் நிலை என்ன? நலமுடன் உள்ளார்களா என தெரியாமல் குழப்பம்
லண்டனில் காணாமல் போன இளம் தாயார் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
லண்டனின் NW8 பகுதியில் கடந்த 14ஆம் திகதி Rosemary Goncalves (29) மற்றும் அவரின் 8 வயது மகள், 6 வயது மகன் காணப்பட்டனர்.
இதன்பின்னர் மூவரும் காணாமல் போயுள்ளனர். Rosemaryக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் ஹாக்னி பகுதியில் இருக்க கூட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி டேரன் புல் கூறுகையில், Rosemary மற்றும் அவர் குழந்தைகளை பார்த்தவர்கள் அல்லது அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அது குறித்து எங்களிடம் தெரிவிக்கலாம்.
மூன்று பேரும் நலமாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
Rosemary ஆகிய நீங்கள் இதை படித்தீர்கள் என்றால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளார்.