லண்டனில் பிள்ளைகள் முன்னிலையில் இளம் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்: அம்பலமான பின்னணி

London Bangladesh Crime
By Arbin Jun 18, 2024 04:09 AM GMT
Report

லண்டனில் பொறாமை கொண்ட கணவனால் பிள்ளைகள் முன்னிலையில் தாயார் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதன் பின்னணி வெளியாகியுள்ளது.

கழுத்தை நெரித்துக் கொலை

தமது இளம் வயது மனைவி, சம வயது இன்னொரு ஆணுடன் தொடர்பில் உள்ளார் என்பதை கண்டறிந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லண்டனில் பிள்ளைகள் முன்னிலையில் இளம் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்: அம்பலமான பின்னணி | London Mother Strangled Death By Her Husband

கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி இரவு கிழக்கு லண்டனின் Docklands பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்து 24 வயதேயான சுமா பேகம் என்பவரை அவரது கணவர் 47 வயது அமினன் ரஹ்மான் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் திணித்து லியா நதியில் வீசியுள்ளார். ஆனால், சூட்கேஸில் திணித்து சுமா பேகத்தின் உடலை நதியில் வீசும் போது அவர் உயிருடன் இருந்தாரா இல்லை, மரணமடைந்திருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுமா பேகத்தின் சடலம் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது. தமது மனைவியை துன்புறுத்தும் போது அவரது காதலனான 24 வயது ஷாஹின் மியா என்பவரை ரஹ்மான் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மியா தெரிவிக்கையில், சுமா பேகத்துடனான உறவில் இருந்து விலகிச் செல்ல தமக்கு 6,000 பவுண்டுகள் வரையில் நிதியளிக்க ரஹ்மான் முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஹ்மானுக்கும் சுமா பேகத்திற்குமான திருமணம் என்பது தொலைபேசி ஊடாகவே நடந்துள்ளது. இதனையடுத்து 2020ல் சுமா பேகம் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

ஒருமுறைகூட நேரில் சந்திக்கவில்லை

சுமா பேகம் இறக்கும் போது அவரது பிள்ளைகள் இருவருக்கும் 2 வயது மற்றும் 4 மாதங்கள் என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மியா தெரிவிக்கையில், டிக்டாக் செயலி ஊடாக சுமா பேகத்தை சந்தித்தபோது தான் பங்களாதேஷில் வசித்து வந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் பிள்ளைகள் முன்னிலையில் இளம் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்: அம்பலமான பின்னணி | London Mother Strangled Death By Her Husband

இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்திக்கவில்லை என்ற போதும், இருவரும் நெருக்கமாக உறவை ஏற்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாகவும், பின்னர் காதலித்ததாகவும்,

ஆனால் 7 அல்லது 8 மாதங்களுக்கு பின்னர் தான், சுமா பேகம் திருமணமானவர் என்பது தமக்கு தெரிய வந்துள்ளதாக மியா தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வது தொடர்பில் திட்டமிட்டதாகவும், லண்டனுக்கு தம்மை சுமா பேகம் அழைத்துள்ளதையும் மியா நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிறகு, சுமா பேகம் லீட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதும், அப்போது அவர் ரஹ்மானுடன் ஒன்றாக வாழவில்லை என்பதையும் தெரிந்துகொண்டதாக மியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2023 பிப்ரவரி 6ம் திகதி மதியம் சுமா பேகத்தின் குடியிருப்புக்கு சென்ற ரஹ்மான் முதல்முறையாக கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். இதை சுமா காணொளி ஊடாக மியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் ஏப்ரல் 29ம் திகதி இரவு சுமா பேகம் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US