லண்டனில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞன்
லண்டனில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதால், அவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான, லண்டன் நகரத்தின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள Oxford Circus பகுதியில் நேற்று மாலை நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் உடன் விரைந்து வந்த பொலிசார் உடனடியாக அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு உயிருக்கு போராடிய இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், தாக்குதலுக்குள்ளான நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தற்போது அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.தாக்குதல் குறித்து மாலை சரியாக 7.15 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போது, குறித்த நபர் பலமுறை கத்தியால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பல முறை கத்தியால் குத்தப்பட்டிருப்பதால், அவரின் நிலை மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது.