லண்டனில் புத்தாண்டு வாணவேடிக்கை., வெளியான முக்கிய தகவல்
இன்று நள்ளிரவு லண்டனில் புத்தாண்டு வாணவேடிக்கை நடைபெறும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புத்தாண்டு தினத்தன்று தலைநகரமான லண்டனில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டன.
இந்த முறையும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால், இப்போது கடைசி நேரத்தில், இன்று இரவு லண்டனில் வாணவேடிக்கைகல் நடைபெறும் என அறைவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது ஒரு பொது நிகழ்வு அல்ல, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வாணவேடிக்கை நிகழ்ச்சியானது BBC One-ல் ஒளிபரப்பப்படும், அதனை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டுகளிக்குமாறு மக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் Elton John மற்றும் Dua Lipa உள்ளிட்ட நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று தி சன் தெரிவித்துள்ளது.
Gareth Southgate, Paloma Faith, Sir Ian McKellen மற்றும் லண்டன் மேயர் Sadiq Khan ஆகியோரின் செய்திகளும் இருக்கும் என்று செய்தித்தாள் கூறியது.
எவ்வாறாயினும், முழு விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.