லண்டனில் இரவுநேர சுரங்க ரயில் சேவை மீண்டும் துவக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்
லண்டனில் இரவுநேர சுரங்க ரயில் சேவை (Night Tube) கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020-இல் இடைநிறுத்தப்பட்ட இரவுநேர சுரங்க ரயில் சேவை, நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கபடுகிறது.
கிட்டத்தட்ட 1,40,000 மக்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்க உதவுவதற்காக இந்த நைட் டியூப் ரயில் சேவையை மீண்டும் தொடங்கக் கோரும் மனுவில் கையெழுத்திட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 27 முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய மற்றும் விக்டோரியா வழித்தடங்களில் இரவு முழுவதும் சேவைகள் நடைபெறும் என்று லண்டனுக்கான போக்குவரத்து துறை (TFL) தெரிவித்துள்ளது.
டிஎஃப்எல் படி, இரண்டு லைன்களில் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே சேவைகள் இருக்கும். விக்டோரியா லைனில் பத்து நிமிட சேவையாக இருக்கும் (ஒரு மணி நேரத்திற்கு ஆறு ரயில்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
White City மற்றும் Leytonstone இடையே உள்ள மையப் பகுதியில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் Leytonstone முதல் Loughton மற்றும் Leytonstone முதல் Newbury Park வழியாக கிழக்கில் ஹைனால்ட் வரையிலும், White City முதல் மேற்கில் Ealing Broadway வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
விரைவில், முன்பு இருந்ததுபோல் முழுமையான நைட் டியூப் நெட்வொர்க்கை திரும்ப கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்படும் என லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

