லண்டனில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் மாயம்! கலக்கத்தில் குடும்பம்: பொலிசார் வெளியிட்டுள்ள புகைப்படம்
லண்டனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலைக்கு முடிந்து வீட்டிற்கு திரும்பிய செவிலியர் பெண் இன்னும் வீடு திரும்பாத காரணத்தினால், பொலிசார் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camberwell பகுதியில் வசித்து வருபவர் Petra Srncova.
32 வயது மதிக்கத்தக்க இவர் தான் வேலை செய்யும், Evelina London Children’s மருத்துவமனையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அதன் பின் இவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இதையடுத்து சக ஊழியர்கள் கடந்த 3-ஆம் திகதி இவர் காணமல் போய்விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இவர் கடைசியாக தன்னுடைய வீட்டிற்காக புறப்பட்ட போது, இரவு 8.20 மணியளவில் காணப்பட்டுள்ளார். அதன் பின் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. அன்றைய தினம், பச்சை நிற கோட் மற்றும் சிவப்பு நிற பையுடன் இருந்துள்ளார்.
இவருடைய குடும்பம் செக் குடியரசி உள்ளதால், அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு விபரமும் தெரியவில்லை.
Petra Srncova, 32, has been #missing from #Camberwell #Southwark #SE5 since 28 Nov.
— Southwark Police | Central South BCU (@MPSSouthwark) December 9, 2021
Her family & police are increasingly concerned for her welfare.
Have you seen her? Do you have info that could help?
☎️ 101 ref 21MIS037753.https://t.co/MsElU8n1fI
இதனால் அவருக்கு என்ன ஆனது என்பதில் குடும்பத்தினரிடையே நாளுக்கு நாள் கவலை அதிகரித்து வருவதாகவும், இதனால் இவரைப் பற்றி யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அவர் வேலை செய்யும் Evelina London மருத்துவமனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காணமல் போன எங்கள் மதிப்புமிக்க ஊழியர் நிலை குறித்து மிகுந்த கவலையில் உள்ளோம், அவரை கண்டுபிடிப்பதற்கு ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி குறிப்பிட்டுள்ளது.
Petra Srncova காணமல் போனது தொடர்பாக பொலிசார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.