லண்டன் O2 அரங்கத்தில் குவிந்த பொலிசாரால் பரபரப்பு: வெளியான அதிர்ச்சி சம்பவம்
லண்டன் O2 அரசங்கத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கத்திக்குத்து தாக்குதல்
லண்டன் O2 அரங்கத்தில் Cineworld திரையங்கத்தினுள்ளேயே கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 2.46 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Image: MyLondon
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், Cineworld திரையரங்கின் உள்ளே, இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்துள்ளதுடன், பின்னர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் அவரது நிலை தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
@getty
தென் கொரிய பாடகர் இசை நிகழ்ச்சி
இதனிடையே, பிரபல தென் கொரிய பாடகர் குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு முன்பு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த இசைக்குழுவினரின் ரசிகர்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என தங்களுக்குள் கூறிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், தென் கொரிய பாடகர்களின் இசை நிகழ்ச்சிக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்புள்ளதா என்பது வெளியாகவில்லை. இந்த நிலையில் O2 அரசங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Image: MyLondon
O2 அரங்கத்தில் உள்ள Cineworld நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும். ஆனால், அவுட்லெட் ஷாப்பிங், பார்கள் மற்றும் உணவகங்கள் உட்பட எஞ்சிய அனைத்தும் திறந்து செயல்படும்.
மேலும், இன்றிரவு அரங்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி தடையின்றி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.