லண்டனில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்
லண்டனில் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட நபரின் புகைப்படம் மற்றும் விபரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Choumert Road சாலையில், உள்ள House of Ramish 2 முடி திருத்தும் கடை முன்பு, கடந்த வெள்ளிக் கிழமை(17.12.2021) பிற்பகல் 3.15 மணிக்கு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்த பொலிசார், காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் நேற்றிரவு(18.12.2021) மாலை 6 மணிக்கு மேல் இறந்துவிட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர்,
.
இவர் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ள பொலிசார், இதை ஒரு கொலை சம்பவமாக எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்,
மேலும், உயிரிழந்த நபர் யார் என்ற விபரத்தை பொலிசார் இன்று(19.12.2021) வெளியிட்டனர், அதில் உயிரிழந்த நபரின் பெயர் Jobari Gooden எனவும் 27 வயது மதிக்கத்தக்க இந்த நபர் அன்றைய தினம் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, அங்கிருந்த கடைகளில் அணிவகுப்புகள் நடந்துள்ளது. இந்த பகுதி ஒரு பரபரப்பாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏராளமான மக்கள் இந்த கொலையை பார்த்திருக்க வாய்ப்பிருப்பதாக நம்புகிறோம்.
எனவே இந்த சம்பவம் குறித்து யாரேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படியும், இல்லை ஆன்லைன் மூலமாவது தகவல் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூத்த புலனாய்வு அதிகாரியான துப்பறியும் தலைமை ஆய்வாளர் Brian Howie கூறுகையில், இந்த சம்பவம் பிற்பகல் Peckham Rye பகுதியின் நடுவில் நடந்துள்ளது.
இங்கு ஏராளமான கடைகள் இருப்பதால், மக்கள் வந்து செல்வதால், இதை நிச்சயமாக யாரேனும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
அந்த நபர்கள் முன்வந்து சொன்னால், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுத் தர முடியும் என்று நம்புவதாக கேட்டுக் கொண்டுள்ளார்.