லண்டனில் இந்திய வம்சாவளி பிரபல மொடலுக்கு உதவ சென்றவர்... கொடூரமாக தாக்கப்பட்ட பெண்
கிழக்கு லண்டனில் பிரபல மொடல் ஒருவரின் செல்லப் பிராணியை பராமரிக்க சென்றவர், கொடூரமாக தாக்கப்பட்டு மூன்று வாரம் அவதிப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திடீரென்று தாக்குதலில்
இந்திய வம்சாவளி மொடல் 22 வயதான சாக்ஷா நாராயண் என்பவரின் செல்லப் பூனையே, திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. குறித்த பூனையை கவனிக்கும்படி சென்ற 25 வயது ஜானிஸ் பின்டோ என்பவர் காயங்கள் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், 14 தையல்கள் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார். Haze என்ற அந்த பூனை திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் தலையை செல்லமாக வருடியதும் தாமதம், அது வெறிகொண்டு தாக்கியுள்ளது.
mylondon
குறித்த பூனையை ஜானிஸ் பின்டோ இரண்டாவது முறையாக கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், காயம் பாதிப்பை ஏற்படுத்த, காயத்தை சுத்தம் செய்வதற்கும் தொற்றுநோயைக் குணப்படுத்துவதற்கும், அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மீண்டு வருவதற்கும் என மூன்று வாரங்கள் தேவைப்பட்டது என ஜானிஸ் பின்டோ தெரிவித்துள்ளார்.
சுமார் 100 பவுண்டுகள் ஊதியத்திற்கு சாக்ஷா நாராயண் என்பவரின் செல்லப் பூனையை கவனித்திக்கொள்ளும் பொறுப்பை ஏற்றிருந்தார் ஜானிஸ் பின்டோ.
தம்மிடம் ஒரு பூனை இருப்பதாக கூறிய ஜானிஸ் பின்டோ, மூன்று ஆண்டுகளாக எனக்கு அது தான் உலகம் என்றும், ஆனால் தற்போது அதனை தமக்கு அருகில் வைத்துக்கொள்ளவே பயமாக இருக்கிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |