லண்டன் PhD மாணவரின் கொடூர முகம்! 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு துஷ்பிரயோகம்
லண்டனில் பி.எச்.டி மாணவர் ஒருவர் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PhD மாணவரின் கொடூர முகம்
லண்டனில் 28 வயது பி.எச்.டி மாணவர் ஜென்ஹாவ் ஸோவ்(Zhenhao Zou), பத்து பெண்களை மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் விசாரணையில், அவர் திட்டமிட்டு தொடர்ச்சியாக பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை துப்பறியும் அதிகாரியின் கூற்றுப்படி, "நமது நாட்டில் இதுவரை நாம் பார்த்திராத மிக அதிகமான குற்றங்களில் ஈடுபட்ட ஒருவராக இவர் இருக்கலாம்" என்று தெரியவந்துள்ளது.
[QBRXO7N
யார் இந்த Zhenhao Zou?
சீனாவைச் சேர்ந்தவரும், யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் (யுசிஎல்) பயின்றவருமான Zhenhao Zou, ஆபாசப் படங்களை வைத்திருந்தது, 11 துஷ்பிரயோக குற்றங்கள், மற்றும் சட்டவிரோதமாக ஆட்களை சிறை வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
2019 முதல் 2024 வரை நடந்த இந்தக் குற்றங்களில், அடையாளம் காணப்பட்ட இரண்டு பாதிக்கப்பட்ட பெண்களும், அடையாளம் காணப்படாத எட்டு பெண்களும் உள்ளனர்.
பொலிஸார் விசாரணையின் போது Zhenhao Zou வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் நகைகள் மற்றும் ஆடைகள் உட்பட அவர்களின் பொருட்களை வைத்திருக்கும் "நினைவுப் பெட்டி" ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்!
அத்துடன், கிடைத்துள்ள வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் Zhenhao Zou-ஆல் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அவர்களை கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் கமாண்டர் கெவின் சவுத்வொர்த் தெரிவித்துள்ளார்.
வழக்கு பற்றிய ஊடக செய்திகளைத் தொடர்ந்து, ஒரு பெண் முன்வந்துள்ளார். மேலும் அவர் வழங்கிய தகவல்படி, ஸோவ் தனது படுக்கையறையில் மறைக்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தியதும், எக்ஸ்டஸி(ecstasy) மற்றும் " GHB மருந்து ஆக மாறும் ஒரு இரசாயனத்தையும் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில் மயக்கமடைந்த அல்லது அரை மயக்கமடைந்த பெண்களை அவர் துன்புறுத்தும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
மிக நீண்ட சிறைத் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோசினா காட்டேஜ், Zou-ஐ ஆபத்தான மற்றும் வேட்டையாடும் குற்றவாளி" என்று கண்டித்துள்ளார்.
அத்துடன் அவருக்கு வரும் ஜூன் 19ம் திகதி மிக நீண்ட" சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |