லண்டனில் சிறுவன் பின்னால் வந்து இளைஞன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்! புகைப்படத்துடன் முழு தகவல்
லண்டனில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவனை பின்னால் இருந்து பிடித்து இழுத்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கிழக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 5 வயதான சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தாருடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது இளைஞன் ஒருவர் அவனை பின் தொடர்ந்து வந்திருக்கிறார்.
பின்னர் சிறுவனை அப்படியே வேகமாக பிடித்து இழுத்திருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார்.
இந்த சம்பத்தில் சிறுவனுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றாலும் அவனுக்கும், குடும்பத்தாருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொலிசார் இதில் தொடர்புடைய இளைஞனின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அந்த இளைஞனின் வயது 20கள் அல்லது 30களில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது மேலதிக தகவல்கள் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.