அதிகரிக்கும் குற்றச்செயல்கள்... 2,000 அதிகாரிகளை இழக்கும் பிரித்தானியாவின் மிகப்பெரிய படை
நிதி குறைப்பு காரணமாக பிரித்தானியாவின் மிகப்பெரிய பொலிஸ் படை சுமார் 2,000 அதிகாரிகளை இழக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 மணி வரையில் மட்டுமே
அத்துடன் பொலிஸ் துறையில் பணியாற்றும் 400 சாதாரண ஊழியர்களும் வேலையை இழக்க உள்ளனர். லண்டன் பொருநகர பொலிசாருக்காக ஒதுக்கப்படும் நிதியில் 450 மில்லியன் பவுண்டுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும், சில லண்டன் பொலிஸ் நிலையங்கள் இனி பகல் 9 மணி தொடங்கி 5 மணி வரையில் மட்டுமே செயல்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான 3.5 பில்லியன் பவுண்டுகள் நிதியில் சுமார் 12.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவே காவல்துறை தலைவர் Sir Mark Rowley குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்று இரவு 11 மணிக்கு காவல்துறை மற்றும் குற்றங்களுக்கான மேயர் அலுவலகத்தால் அறிவிக்கப்படும். அத்துடன் எடுக்கப்பட வேண்டிய சில கடுமையான நடவடிக்கைகள் தொடர்பிலும் தகவல் வெளியிடப்படும்.
ஆனால் நிதி குறைப்பு முடிவுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி குறைப்பதால் கண்டிப்பாக அதன் தாக்கம் சமூகத்தில் ஏற்படும் என காவல்துறை கூட்டமைப்பின் Matt Cane எச்சரித்துள்ளார்.
முன்னாள் அதிகாரிகள் எச்சரிக்கை
மேலும், நிதி குறைப்பால் காவல்துறை அதிகாரிகள் வேறு வேலைக்கு செல்லக் கூடிய நெருக்கடியும் இருப்பதாக முன்னாள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெருநகர காவல்துறையில் 35,415 அதிகாரிகள் செயல்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது 32,750 என குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் முதல் வரும் நிதியாண்டில் கூடுதலாக 2,000 காவலர்களின் இழப்பு, காவல்துறையை 2013 ஆம் ஆண்டு நிலைக்கு தள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், லண்டன் மக்கள் தொகையை ஒப்பிட்டு பொலிசாருக்கு செலவிடும் தொகையானது நியூயார்க் மற்றும் சிட்னி போன்ற நகரங்களை விட ஏற்கனவே குறைவாக இருப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |