லண்டனை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்! புகைப்படங்கள்
லண்டனில் இரட்டை சகோதரிகள் காணாமல் போயுள்ளது தொடர்பாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் டுவிக்கின்ஹம்மை சேர்ந்த 13 வயதான இரட்டை சகோதரிகள் பாப்பி மற்றும் லில்லி மியிரிஸ்.
இருவரும் கடந்த 3ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
பாப்பி மறும் லில்லி ஆகிய இருவரும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என பொலிசார் கருதுகின்றனர்.
இதனால் அவர்கள் நண்பர்களின் பெற்றோர்கள் இது குறித்து பிள்ளைகளிடம் கேட்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பாப்பி மற்றும் லில்லி கடைசியாக அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தாலும் உடனடியாக தங்களிடம் கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

