லண்டன் பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறல்! பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய புகைப்படம்
லண்டன் பேருந்தில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறல்.
சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டு குற்றவாளியை தேடும் பொலிசார்.
லண்டன் பேருந்தில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபரை பொலிசார் தேடி வரும் நிலையில் சிசிடிவி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனில் ரூட் 122ல் கடந்த 2ஆம் திகதி சென்று கொண்டிருந்த பேருந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் பயணித்தார். அப்போது அவரை அணுகிய நபர் ஒருவர் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட முயன்றார்.
இதையடுத்து அவரை தள்ளிவிட்ட டீன் ஏஜ் பெண் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்று நடந்தது குறித்து தாயாரிடம் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் இருக்கும் நபரிடம் இச்சம்பவம் தொடர்பாக பேசி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அவரை அடையாளம் கண்டால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
Met Police